Friday, July 4, 2008

ஆத்திகமில்லாமல்...

மருத்துவனால் முடியாத
நோய்களை குணமாக்க
பூஜிக்கும் குருக்களுக்கு
பிரசங்கிக்கும் பாதிரிக்கு
தூபங்காட்டும் ஹாஜிக்கு
இவர்களுக்கு
வசூல் செய்துதர
பூட்டிய
கதவுகளுக்குப்பின்னால்
புன்னகைத்தபடி
கடவுள்கள்...

நீயும்...

கருவறைக்குள்
கண்டபடி
இன்பம்தான்
இருப்பினும் தாய்க்கு...
இதயத்துள் நீயும்...

பெண்கள்...

தெரிவதில்லை கண்களுக்கு
தெய்வங்கள்
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
தாய் என்னும்
தெய்வம்...

பிரிவு...

இருந்தும் என்னபயன்
இணையத்தளமாய்...
முகவரி நீ இல்லாமல்...

Friday, May 30, 2008

தவிக்கிறேன்...

மறந்து விட நினைத்து
மறக்கும் நிமிடங்களில்
மறப்பதாய் நினைத்து
நினைத்து கொண்டிருக்கிறேன்
மீண்டும் மீண்டும்
மறக்க நினைத்த உன்னை
மறக்க நினைத்த நான்
மனதில் காதல்...

Thursday, May 29, 2008

கவிதை...

எடுத்த காகிதத்தில்
எதுவும் இல்லை
எழுத என
எண்ணி ஏங்கி
தலைப்பு கொடுத்தேன்
தலைவி உன் பெயரை...
உன் பெயரே
கவிதையாயிருக்கையில்
இனி எதற்கு
எதுகை மோனைகள்...

Monday, May 26, 2008

வாழ்க்கை...

மண்ணை மிதித்துக்கொண்டிருக்கிறாய்
நீ இப்போது...
மண் உன்னை மிதிக்கும்
நீ நீயாக இல்லாதபோது...

மனிதா...

மல்லிகையாயிருக்கும் நீ
மாறிப்போவாய்
காகிதப் பூவாய்...
காதலித்தால்...

அம்மா பாசம்...

தோள் வலிக்க தாலாட்டினாள்
தோளனாகிப் போனேனாம்
தோளுக்கு மேல் வளர்ந்து
தொல்லைகளை மட்டுமல்ல
அனைத்தையுமே தாங்கிக் கொள்கிறாள்
அம்மா...
எதற்கு?

Friday, May 23, 2008

பழைய காதலிகள்...

ஆரம்பப்பள்ளி படிக்கையில்
என்னுடன் படித்தவள் உடனான
எனது உறவு
நடுநிலை பள்ளி வரை
நீண்டு கொண்டே போன...
விடுமுறை நாட்களில்
வீட்டுக்கு வந்த
விருந்தாளி பெண் உடனான
எனது உறவு
விடுமுறை முடியும் வரை
விரிந்து கொண்டே போன...
பழைய காதலிகள்
பலர்
விதவிதமாய்
விபரம் புரியா வயதில்...
எல்லாமும் புரிந்து
இப்போது
தனிமையில் நான்...

Thursday, May 22, 2008

மழை...

விளைநிலங்களில்
வீடுகள்
மரங்களிருந்த இடங்களில்
மனித இனம்
மஹாராஜாக்கள் போல்
மாளிகைகளில்
செய்வது எல்லாம்
செய்துவிட்டு
செய்து வைக்கின்றனர்
திருமணத்தை
கழுதைக்கும் காக்கைக்கும்
மழை வேண்டி.....

Tuesday, May 20, 2008

தேசப்பற்று...

சுதந்திர தினத்தன்றும்
குடியரசு தினத்தன்றும்
சுத்தப்படுத்தப்பட்டு
கொடிக்கம்பத்தில் ஏற்றப்படும்
அன்று மாலையே
பள்ளிக்கூட அலமாரியில்
பாதுகாப்பாய் வைக்கப்படும்
தேசிய கொடியும்
தேசத்தின் மீதுள்ள பற்றும்...

பெண் உரிமை...

பாரதி
அன்று பட்ட பாடிற்கு
இன்று பலன்...

இருப்பது எல்லாம் காண்பிக்கும்
இறுக்கமான ஆடைகளை
அணிந்துகொள்ள

கட்டிக்கொண்டவன் தரும்
கட்டில் சுகம் பற்றவில்லை என
அரைகுறை ஆண்களுடன்
அத்து மீறி சுற்ற

மகளிர் மன்றம்
மாங்காய் என
வீதிகளில் சுற்ற
வீண் பிரச்சனைகள் செய்ய

பெற்று இருக்கின்றனர்
பெண் உரிமையை
எம் பெண்டுகள்

பாரதி
அன்று பட்ட பாடிற்கு
இன்று பலன்...

அம்மாக்கள்...

நீயும் இல்லை
நானும் இல்லை
அம்மாக்கள் மட்டுமே
கடவுள்கள்...

நாவில்
நட்டநடு முதுகில்
கண்களுக்கு கீழ்
கன்னங்களில் அலகு குத்தி
ஈயத் தட்டுகளில்
ஈயன முறைத்துக்கொண்டு
பைசாக்கள் சேகரிக்கும்
பளபளக்கும் சொம்பின் பின்னால்
பிச்சை எடுப்பவன் கையில்
பிற கடவுள்கள்...

அம்மாக்கள் மட்டுமே
கடவுள்கள்...

வாழ்க்கை...

மண்ணை மிதித்து கொண்டிருக்கிறாய்
நீ இப்போது...
மண் உன்னை மிதிக்கும்
நீ நீயாக இல்லாதபோது...

அம்மா...

கண்ணிற்கு
புலப்படாத சிலவற்றிற்கு
புனிதம் சற்று அதிகம்
காற்று
காதல்
கடவுள் என
நீளும் பட்டியலில்
நீயும்......

Monday, May 19, 2008

அம்மா பாசம்...

தோள் வலிக்க தாலாட்டினாள்
தோழனாகி போனேனாம்
தோளுக்கு மேல் வளர்ந்து
தொல்லைகளை மட்டுமல்ல
அனைத்தையுமே தாங்கிகொள்கிறாள்
அம்மா.....
எதற்கு?